த்ரிஷாவுக்கு வருண் மணியனின் வித்தியாசமான கல்யாண பரிசு!

த்ரிஷாவுக்கு வருண் மணியனின் வித்தியாசமான கல்யாண பரிசு!

செய்திகள் 20-Jan-2015 1:03 PM IST VRC கருத்துக்கள்

நடிகை த்ரிஷா – தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. இதையொட்டி வருண் மணியன் த்ரிஷாவுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசளிக்க இருக்கிறார் என்று பல மீடியாக்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அது உண்மை இல்லையாம்! த்ரிஷாவுக்கு கார் மீதெல்லாம் அவ்வளவு ப்ரியம் இல்லையாம். த்ரிஷா சின்ன வயதிலிருந்தே விலங்கினங்கள் மீது அபரிமித பாசமும், பிரியமும் கொண்டவர்! இது வருண் மணியனுக்கும் தெரியும் என்பதால் அவர் த்ரிஷாவை சந்தோஷப்படுத்துவதற்காக திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் அந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான விலங்கினங்களுக்கு உணவு வழங்கியும், அந்த விலங்கினங்கள் நிரந்தரமாக தங்க ஒரு இடத்தை அமைத்துக் கொடுத்தும் த்ரிஷாவை சந்தோஷப்படுத்த இருக்கிறார்! இது தான் வருண் மணியன் த்ரிஷாவுக்கு அளிக்கும் திருமண் பரிசாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;