நிஜ கண்ணாடியை தலையால் உடைத்த தல!

நிஜ கண்ணாடியை தலையால் உடைத்த தல!

செய்திகள் 20-Jan-2015 12:50 PM IST Chandru கருத்துக்கள்

மங்காத்தா, வீரம், தற்போது என்னை அறிந்தால் என வரிசையாக அஜித் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்’ சில்வா மாஸ்டர். தொடர்ந்து அஜித் படங்களில் பணிபுரிவது குறித்து மனம் திறந்து பேசியபோது,

‘‘வெங்கட்பிரபுதான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘மங்காத்தா’வின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டன. சிவா சார்கூட ஏற்கெனவே பணி புரிந்திருந்ததால் வீரம் கிடைத்தது. அதில் ரயில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள் ஆகிய படங்களில் ஏற்கெனவே நான் கௌதம் சாருடனும் வேலை செய்துள்ளதால் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் எங்கள் கூட்டணி தொடர்கிறது. அதோடு அஜித் சார்க்கும் என்னை பிடிக்கும் என்பதால் தொடர்ந்து அவர் படங்களில் சந்தோஷமாக பணிபுரிந்து வருகிறேன்.

அஜித் சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்... நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்தப் படத்தில் ‘தல’ தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார். அவர்தான் ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியைக் கிளப்புவாரே தவிர, சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றியும் பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர், சிறியவர் என்று பாராமல் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார். அவரது விடா முயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார்.” என்று அஜித்தைப் புகழ்ந்து தள்ளினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;