காதலர் தினத்தில் ஜி.வி.யின் இசை!

காதலர் தினத்தில் ஜி.வி.யின் இசை!

செய்திகள் 20-Jan-2015 11:45 AM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’ ஹிட் அடித்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதனை தொடர்ந்து தான் நடித்து வரும் ‘பென்சில்’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை துவங்கி விட்டார் ஜி.வி.பிரகாஷ்! மணிநாகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, இப்படத்திற்கும் ஜி.வி.யே இசை அமைக்கிறார். ‘பென்சில்’ படத்தின் பாடல்களை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘டார்லிங்’ படத்திற்காக ஸ்ரேயா கோஷலை ஒரு பாடலை பாட வைத்த ஜி.வி.பிரகாஷ் ‘பென்சில்’ படத்திற்காகவும் ஸ்ரேயா கோஷலை பாட வைத்திருக்கிறார். ‘ஈராஸ்’ நிறுவம் இப்படத்தின் ஆடியோ உரிமையை கைபற்றியுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;