தனுஷுடன் மோதும் விஜயகாந்த் மகன்!

தனுஷுடன் மோதும் விஜயகாந்த் மகன்!

செய்திகள் 20-Jan-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக சுப்ரா, நேஹா ஆகிய இரண்டு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘போஸ்’ வெங்கட், ரஞ்சித், ‘தலைவாசல்’ விஜய், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள். சென்னை மற்றும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் படமாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 31-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து ‘சகாப்தம்’ படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சுரேந்தர் இயக்கி வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை லகரி ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படம் ஃபிப்ரவரி 13-ஆம் தேதி ரிலீசாவகவிருக்கிற நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘சகாப்தம்’ ஃபிப்ரவரி 14- ஆம் தேதி ரிலீசாகவிருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டீசர்


;