ஹீரோவாகும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி!

ஹீரோவாகும்  ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி!

செய்திகள் 20-Jan-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

பொங்கலையொட்டி வெளியான விஷால் – சுந்தர்.சி.கூட்டணியின் ‘ஆம்பள’ திரைப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ’ஆம்பள’ படக்குழுவினர் நேற்று பத்திரைகையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பவர் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி. இந்தப் படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம்! ‘ஆம்பள’ படத்தின் மூலம் ஆதியை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்திய சுந்தர்.சி.பேசும்போது, ‘‘ஆம்பள’யின் வெற்றிக்கு ஆதியின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. ‘ஆம்பள’ மூலம் இசை அமைப்பாளராக அவரை அறிமுகப்படுத்திய எனக்கு என் கம்பெனி மூலம் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என்றே நம்புகிறேன்’’ என்றார். ஒரு சில ஆல்பங்களில் பாடி நடித்துள்ள ஆதிக்கு நடிப்பும் கைவந்த கலையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;