தமிழ் கற்கிறார் அமிதாப் பச்சன்!

தமிழ் கற்கிறார் அமிதாப் பச்சன்!

செய்திகள் 20-Jan-2015 10:18 AM IST Chandru கருத்துக்கள்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களாக ஏற்று ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்து வருகிறார். ‘சீனி கம்’, ‘பா’ படங்களைத் தொடர்ந்து பால்கி இயக்கி வரும் ‘ஷமிதாப்’ படத்திலும் அமிதாப்தான் ஹீரோ. இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நம்மூர் தனுஷும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன.

தனுஷ், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் போன்ற நம்மூர் பிரபலங்கள் பலரும் ‘ஷமிதாப்’பில் இணைந்திருப்பதால், இப்படத்தின் தமிழ் டப்பிங்கையும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரமோஷனுக்காக விரைவில் சென்னை வரவிருக்கிறார் அமிதாப் பச்சன். அப்படி சென்னை வரும்போது தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில், அவர்களுடன் தமிழில் பேச வேண்டும் என ஆசைப்பட்ட அமிதாப், சில முக்கியமான விஷயங்களை தமிழில் பேசுவதற்கு தற்போது கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

கூடிய விரைவில் அமிதாப்பின் தமிழ் சொற்பொழிவைக் கேட்பதற்கு தயாராக இருங்கள் ரசிக கண்மணிளே...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;