சென்சார் போர்டில் எஸ்.வி.சேகர், ஜீவிதா!

சென்சார் போர்டில் எஸ்.வி.சேகர், ஜீவிதா!

செய்திகள் 20-Jan-2015 10:04 AM IST VRC கருத்துக்கள்

மத்திய சென்சார் குழு தலைவராக பொறுப்பு வகித்து வந்த லீலா சாம்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மேலும் 9 சென்சார் குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து சென்சார் குழு மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி புதிய உறுப்பினர்களை கொண்டு அமைத்துள்ள சென்சார் குழுவில் தமிழகத்திலிருந்து நடிகர் எஸ்.வி.சேகர், தமிழ், தெலுங்கு நடிகையும், நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவியுமான ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் புதிய சென்சார் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், மும்பை தலைமையிடமாக கொண்டு மத்திய சென்சார் போர்டு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;