சுமார் மூஞ்சி குமார் - பார்ட் 2

சுமார் மூஞ்சி குமார் - பார்ட் 2

செய்திகள் 20-Jan-2015 9:35 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்சேதுபதியின் கேரியரில் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு முக்கிய இடமுண்டு. அப்படத்தில் அவர் ஏற்றிருந்த ‘சுமார் மூஞ்சி குமார்’ கேரக்டருக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. சென்னைத் தமிழ் பேசி, லோக்கலாக அவர் நடித்திருந்த விதம் விமர்சகர்களிடையேயும் பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது.

இதனால் அதேபோன்ற பாணியில் இன்னொரு படத்தை உருவாக்கலாமா என விஜய்சேதுபதியும், இயக்குனர் கோகுலும் யோசித்திருக்கிறார்களாம். சமீபத்தில் நடந்த விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சந்தித்துக் கொண்ட இருவரும் இதுகுறித்து பேசியிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது விஜய்சேதுபதி ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘நானும் ரௌடிதான்’, ‘புறம்போக்கு’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் இயக்குனர் கோகுலும் கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் ‘காஸ்மோரா’ படத்தின் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். மேற்கண்ட படங்கள் முடிவடைந்தபிறகு கோகுலின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் வேலைகள் துவங்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;