சுந்தர்.சி, விஷால் இணையும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

சுந்தர்.சி, விஷால் இணையும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

செய்திகள் 19-Jan-2015 5:42 PM IST Chandru கருத்துக்கள்

‘ஆம்பள’ படத்தின் சூப்பர் வெற்றி தந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் நடிகர் விஷாலும், இயக்குனர் சுந்தர்.சியும். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 17 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதோடு விஷால் கேரியரில் இது ஒரு மிகப்பெரிய ஓபனிங்காகவும் கருதப்படுகிறது.

இந்த வெற்றி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் சுந்தர்.சி ‘தான் விஷாலுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருப்பதை’ தெரிவித்தார். எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாம். இதே பாணியில் ஒரு படத்தை இயக்க வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால், அதேபோன்ற படத்தை எடுக்க வேண்டுமென்றால் பல நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அந்தத் திட்டத்தை தள்ளிப்போட்டு வைத்திருந்தாராம்.

இப்போது ‘ஆம்பள’ வெற்றி தந்த உற்சாகத்தில் விஷாலையே நாயகனாக வைத்து அப்படத்தை இயக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம். இப்படத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;