சிவகார்த்திகேயனின் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’

சிவகார்த்திகேயனின் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’

செய்திகள் 19-Jan-2015 2:47 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்தி பறவை’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த டி.இமான் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்திற்கும் இசை அமைப்பாளர்! ஏற்கெனவே இவர்கள் இருவரும் இணைந்த இரண்டு படங்களின் பாடல்களும் ஹிட்டாகியுள்ளதால் ‘ரஜினி முருகன்’ படப் பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கினறனர் இருவரும்! தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் ‘ரஜினி முருகன்’ படத்திற்காக பாப்புலர் வசனமான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா… என்ற சொல்லில் துவங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுத, அதை சமீபத்தில் பதிவு செய்துள்ளார் டி.இமான்! சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;