ரித்திக் ரோஷன், அமீர்கான், சல்மான்கானைத் தொடர்ந்து விக்ரம்!

ரித்திக் ரோஷன், அமீர்கான், சல்மான்கானைத் தொடர்ந்து விக்ரம்!

செய்திகள் 19-Jan-2015 2:36 PM IST Chandru கருத்துக்கள்

விக்ரமின் ‘டெடிகேஷ’னைப் பார்த்து வாய் பிளந்து நிற்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். ‘ஐ’ படத்தின் தமிழ் பதிப்பு மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் விக்ரமின் கெட்அப்களைப் பார்த்து வியந்துபோய்தான் இருக்கிறார்கள். முதல் 5 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்திருக்கும் ‘ஐ’ சத்தமில்லாமல் இன்னொரு சாதனையையும் படைத்திருக்கிறது. ஆம்... ‘ஐ’ படத்தின் டீஸர் ‘யு டியூப்’பில் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்த முதல் தென்னிந்திய டீஸர்/டிரைலர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தலைமையில் நடைபெற்றது. அன்றுதான் ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் வெளியிடப்பட்டது. இந்த டீஸர் வெளியானது முதலே பல சாதனைகளை செய்து வந்தது. குறிப்பாக 15 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்கள், ஒரு நாளில் 15 லட்சம் பார்வையாளர்கள், 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த முதல் தென்னிந்திய டீஸர் என பல சாதனைகளைப் படைத்தது ‘ஐ’. இப்போது டீஸர் வெளியாகி 4 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்திய அளவில் ஏற்கெனவே 5 படங்களின் டீஸர்/டிரைலர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கின்றன. இப்போது ஷங்கர், விக்ரமின் ‘ஐ’ படமும் அந்தப் பட்டியலில் 6வது படமாக இணைந்திருக்கிறது.

ரித்திக் ரோஸன், அமீர் கான், சல்மானைத் தொடர்ந்து 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற ஹீரோ என்றால் அது நம் தமிழ் சினிமாவின் விக்ரம் மட்டுமே!

இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த டீஸர்/டிரைலர் பட்டியல் :

1. KRRISH 3 Trailer - 23.2M
2. DHOOM 3 Trailer - 19.5M
3. Kick Trailer - 18.1M
4. DHOOM 3 Teaser - 16.0M
5. BANG BANG! Teaser - 15.1M
6. I Teaser - 10.1M
7. Ram leela Trailer - 9.5M
8. Jab Tak Hai Jaan Trailer - 8.5M
9. 2 States - Trailer - 8.3M
10. Singham Returns Trailer - 7.9M

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;