தொடங்கியது விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன்’

தொடங்கியது விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன்’

செய்திகள் 19-Jan-2015 11:56 AM IST VRC கருத்துக்கள்

‘சலீம்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்து வரும் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய் ஆன்டனி! இப்படத்தின் பெரும்பாலான வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் விஜய் ஆன்டனி தனது அடுத்த படமான ‘பிச்சைக்காரன்’ பட வேலைகளையும் துவக்கி விட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. அத்துடன் தனது ‘சலீம்’ படத்தை தெலுங்கில் ‘டாக்டர் சலீம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ள விஜய் ஆன்டனி, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஃபிப்ரவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து படத்தை ஃபிப்ரவரி கடைசியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம். என்.ஆனந்த் இயக்கி வரும் ‘இந்தியா பாக்ஸ்தான்’ படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;