இசையால் கிடைத்த நடிக்கும் வாய்ப்பு!

இசையால் கிடைத்த நடிக்கும் வாய்ப்பு!

செய்திகள் 19-Jan-2015 11:43 AM IST VRC கருத்துக்கள்

ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமாகும் ஜனனி ராஜன் தனது முதல் பட அனுபவம் குறித்து கூறும்போது,

“எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 13 ஆண்டுகளாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன். ‘வானவில் வாழ்க்கை’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்கு பாடவும், நடிக்கவும் தெரிந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜேம்ஸ் வசந்தன் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதிக் கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை. பிறகு படத்தின் கதையை பற்றி சொன்னதும் அவர்கள் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். நிச்சயம் நல்ல பெயர் வாங்காமல் விட மாட்டேன்” என்கிறார் ஜனனி உற்சாகத்துடன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;