‘ஐ’ படத்தின் 5 நாள் கலெக்ஷன்?

‘ஐ’ படத்தின் 5 நாள் கலெக்ஷன்?

செய்திகள் 19-Jan-2015 11:20 AM IST Chandru கருத்துக்கள்

ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் வெளியான ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கு விமர்சனங்கள் இருவேறாக வந்து கொண்டிருந்தாலும் ‘கலெக்ஷனில்’ கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த 14ஆம் தேதி வெளியான இப்படம் முதல் 5 நாட்களில் மட்டுமே உலகளவில் கிட்டத்தட்ட 124 கோடிகளை வசூலித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

‘ஐ’ படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் தமிழிலும், ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கிலும், வட இந்தியாவில் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 45 கோடி ரூபாய்க்கு மேலும், கேரளாவில் 6 கோடி ரூபாய்க்கு மேலும் முதல் 5 நாட்களில் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறதாம். குறிப்பாக கேரளாவில் இதுவரை எந்த தமிழ்ப்படமும் இவ்வளவு பெரிய தொகை வசூலித்ததில்லை என்று கூறுகிறார்கள். அதேபோல் ‘ஐ’யின் தெலுங்கு பதிப்பு மட்டும் 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். மற்ற மொழி படங்களைப் பொறுத்தவரை ஆந்திராவில் இதுவும் ஒரு சாதனை வசூலாம். 16ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘ஐ’யின் ஹிந்தி பதிப்பு இதுவரை 7 கோடிக்கும்மேல் வசூல் செய்துள்ளது என்கிறார்கள். வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 25 கோடிகளை வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

மொத்தமாக 5 நாட்களில் ‘ஐ’ படம் இந்தியாவில் 100 கோடிகளையும், வெளிநாடுகளில் 25 கோடிகளையும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பு தரப்பிலிருந்து வசூல் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;