லட்சுமி ராமகிருஷ்ணனின் அம்மிணி!

லட்சுமி ராமகிருஷ்ணனின் அம்மிணி!

செய்திகள் 19-Jan-2015 10:41 AM IST VRC கருத்துக்கள்

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படம் ‘அம்மிணி’. ‘டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வெண் கோவிந்தன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. இப்படம் குறித்து இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

‘‘அம்மிணி’ படத்திற்கான பூஜை மட்டும் நடந்துள்ளது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படம் நிஜ சம்பவத்தை வைத்து எடுக்கப்படும் படமா என்று கேட்கிறார்கள். இது நிஜ கதை இல்லை! நான் தொகுத்து வழங்கி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு 79 வயதுடைய ஒரு பெண்மணி வந்திருந்தார். அப்போது அவர் சொன்ன சில விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது. அந்த இன்ஸ்பிரேஷனிலிந்து உருவாக்கப்பட்ட கதை தான் ‘அம்மிணி’. மற்றபடி இது அந்த 79 வயதுடைய பெண்மணியோட கதையோ, நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதையோ இல்லை, முற்றிலும் மாறுபட்ட கதை’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மணி - டிரைலர்


;