‘டார்லிங்’ நாயகனுடன் இணைந்த ‘கயல்’ நாயகி!

‘டார்லிங்’ நாயகனுடன் இணைந்த ‘கயல்’ நாயகி!

செய்திகள் 19-Jan-2015 10:34 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளிவந்து பரவலாக பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்கள் ‘கயல்’ மற்றும் ‘டார்லிங்’. ‘பொறியாளன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஆனந்திதான் ‘கயல்’ படத்தின் நாயகியும். அதேபோல் ‘டார்லிங்’ மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அதோடு ‘பென்சில்’ படத்திலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் புது வரவுகளான ஜி.வி.யும், ஆனந்தியும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் தற்போது இணைந்திருக்கிறார்கள்.

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்திற்கு நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதனும், எடிட்டிங்கை ரூபனும் கவனிக்கிறார்கள். இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 22ஆம் தேதி துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;