‘சென்னை ரைனோஸ்’ அணிக்கு 2வது வெற்றி!

‘சென்னை ரைனோஸ்’ அணிக்கு 2வது வெற்றி!

செய்திகள் 19-Jan-2015 9:40 AM IST Chandru கருத்துக்கள்

நடந்து கொண்டிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் (சிசிஎல்) தமிழ் சினிமா நட்சத்திரங்களின் ‘சென்னை ரைனோஸ்’ அணி 2வது வெற்றியைச் சுவைத்து அரையிறுதி போட்டிக்கான தகுதிக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தனது முதல் போட்டியில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வென்ற ‘சென்னை ரைனோஸ்’ நேற்று நடந்த போட்டியில் ‘வீர் மராத்தி’ அணியையும் வென்று சாதித்தது.

‘டாஸ்’ வென்ற ‘சென்னை ரைனோஸ்’ அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த வீர் மராத்தி அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தனர். சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான நடிகர் ஜீவா 3 விக்கெட்டுகளையும், விஷ்ணு 2 விக்கெட்களையும், சாந்தனு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பின்னர் களமிறங்கிய ‘சென்னை ரைனோஸ்’ அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 12.3 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட 155 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது. நடிகர் விஷ்ணு 82 ரன்களுடனும், ரமணா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விக்ராந்த் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;