கோடை விடுமுறைக்கு தயாராகும் ‘உப்பு கருவாடு’

கோடை விடுமுறைக்கு தயாராகும் ‘உப்பு கருவாடு’

செய்திகள் 17-Jan-2015 1:18 PM IST VRC கருத்துக்கள்

‘பயணம்’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கி வரும் படம் ‘உப்பு கருவாடு’. இப்படத்தை ராதா மோகனின் ‘நைட் ஷோ பிக்சர்ஸ்’ நிறுவனமும் ராம்ஜி நரசிம்மனின் ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

‘‘இந்த படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும் , அந்த லட்சிய பயணத்தை தொடர விடாமல் சிறு பிரச்சினைகள் தடுத்து நிறுத்தும்போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் பற்றிய கதை ஆகும். இதனை
நகைசுவை கலந்து வழுங்குகிறேன். நகை சுவை படங்கள் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு மோகம் உண்டு. என்னுடைய முந்தைய படங்களில் கூட நகைசுவை பிரதானமாக தெரியும். அதைப் போல 'உப்பு கருவாடு' படத்திலும் நகைச்சுவைக்கான களம் அமைந்துள்ளது’’ என்கிறார் இயக்குனர் ராதா மோகன்!

இப்படத்தில் கருணாகரன், நந்திதா இணைந்து நடிக்க, எம். எஸ். பாஸ்கர், மயில்சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன், 'டவுட்' செந்தில் ஆகியோரும் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிபதிவு செய்கிறார். பிரசித்தி பெற்ற கிட்டார் இசை கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். கோடை விடுமுறை வெளியீடாக இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;