வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டன்!

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டன்!

செய்திகள் 17-Jan-2015 12:36 PM IST VRC கருத்துக்கள்

‘‘எந்த ஒரு படத்துக்கும் தலைப்பு விளம்பரம் என்பது மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக குறைந்த முதலீட்டில் தயாரிக்கும் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகள் அவசியம். இதனை கருத்தில் கொண்டு நான் இயக்கியுள்ள படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்புதான் 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்பது’’ என்றார் இப்படத்தை இயக்கியுள்ள அபிநிந்திரன். மேலும் அவர் படம் குறித்து கூறும்போது,

‘‘நமது சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூட நம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம் தான் இது. இந்தப் படத்திற்கு சாரங்கராஜன் ஒளிபதிவு செய்ய, 'காதல்' படப் புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார். புதுமுகங்களுடன் சில பரிச்சயமான முகங்களும் நடித்துள்ள இப்படத்தை தேவன்ஷு ஆர்யா தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு பிரபல ஒளிபதிவாளர் ரவி வர்மன் மற்றும் ஷெட்டி ஆகியோர். படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து, தொழில் நுட்ப வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் எல்லா தரப்பினரையும், வயதினரையும் கவரும் விதமாக உருவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார் இயக்குனர் அபநிந்திரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;