‘டார்லிங்’ படத்திற்கு கிடைத்த சூப்பர் வரவேற்பு!

‘டார்லிங்’ படத்திற்கு கிடைத்த சூப்பர் வரவேற்பு!

செய்திகள் 17-Jan-2015 11:36 AM IST VRC கருத்துக்கள்

பொங்கலையொட்டி ஷங்கரின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’, ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ‘டார்லிங்’ ஆகிய 3 படங்கள் வெளியாகின! இதில் ‘டார்லிங்’ படத்திற்கு எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் முதலில் 150 தியேட்டர்களில் வெளியிடபட்ட ‘டார்லிங்’குக்கு ஓரிரு நாட்களிலேயே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதால் இப்படத்தை மேலும் 25 தியேட்டர்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது 175 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ’டார்லிங்’குக்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை மேலும் 25 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் இப்படக் குழுவினர். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் முதன் முதலாக வெளியாகியுள்ள ‘டார்லிங்’ படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;