ஷங்கரின் ‘ஐ’ வசூல் எப்படி?

ஷங்கரின் ‘ஐ’ வசூல் எப்படி?

செய்திகள் 17-Jan-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சில தினங்களுக்கு முன் வெளியான ஷங்கரின் ‘ஐ’ திரைப் படம் வெளியான அத்தனை இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 600-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகியுள்ளதாகவும் அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இப்படம் முதல் 3 நாளில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். ஆந்திராவில் வெளியான ‘ஐ’ இதுவரை அங்கு வெளியான அத்தனை தமிழ் படங்களின்ன் வசூலையும் முறியடித்துள்ளதாம். அங்கு ஐ மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் வெளியான ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 5.86 கோடியாம்! இந்த வசூல் சாதனையை ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் ஒரு நாளில் 7 கோடி ரூபாய் கலெக்ட் செய்து முறியடித்துள்ளது! இதைப் போலவே கேரளாவிலும் ’ஐ’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு 220—க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ள ‘ஐ’ 3 நாட்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்! கேரளாவை பொறுத்தவரை இதுவரை வெளியாகி வசூல் செய்த அத்தனை தமிழ் படங்களின் வசூலையும் ‘ஐ’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரை 3 நாட்கள் கலெக்‌ஷன் 5 கோடி என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;