வசந்த் இயக்கத்தில் மீண்டும் பத்மப்ரியா!

வசந்த் இயக்கத்தில் மீண்டும் பத்மப்ரியா!

செய்திகள் 17-Jan-2015 10:18 AM IST VRC கருத்துக்கள்

திருமணமான நடிகைகள் மீண்டும் நடிக்க வருவது புதிய விஷயமில்லை. அந்த வரிசையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை பத்மப்ரியாவும் மீண்டும் நடிக்க வருகிறார். ஏற்கெனவே வசந்த் இயக்கிய ‘சத்தம் போடாதே’ படத்தில் நடித்த பத்மப்ரியா, மீண்டும் வசந்த் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்று பெயர் வைத்துள்ளார் வசந்த். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படமாம் இது! இதில் கதையின் நாயகியாக பத்மப்ரியா நடிக்க, இன்னும் சில பெண்களாக ரம்யா நம்பீசன், பார்வதி மேன்ன ஆகியோர் நடிக்கிறார்களாம்! இப்படத்திற்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசை அமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மலையாளத்திலும் பிரபலமான நடிகையாக விளங்கிய பத்மப்ரியா தமிழில் கடைசியாக நடித்த படம் ‘தங்கமீன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;