விரைவில் திரைக்கு வரும் ‘CSK’

விரைவில் திரைக்கு வரும் ‘CSK’

செய்திகள் 14-Jan-2015 4:44 PM IST VRC கருத்துக்கள்

‘எஸ்.எஸ். ஃபிலிம்ஸ்’ சார்பில் ஸ்ரீநிவாசன் தயாரித்துள்ள படம் 'CSK’ (சார்லஸ் ஷஃபீக் , கார்த்திகா). இந்தப் படத்தை ‘Vibrant மூவீஸ்’ வெங்கடேஷ் வெளியிட உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ். சத்தியமூர்த்தி அழகிய காதல்- த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார். இவர் பிரகாஷ் ராஜ் மற்றும் கே.வி. குகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் இது.

‘‘நல்ல கதையம்சம் உள்ள சிறிய படங்களை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். இந்த 'CSK’ என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று! இப்படத்தின் கதையும் அதிவேகமான திரைகதை அமைப்பும் என்னை கவர்ந்தது. குறைந்த பொருட்செலவில் தரமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இப்படக் குழுவினர். இத்திரைப்படத்தை வெளியிடுவதில் எனது நிறுவனம் மிகவும் பெருமை படுகிறது’’ என்கிறார் ‘Vibrant மூவீஸ்’ அதிபர் வெங்கடேஷ். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரகத நாணயம் - டீசர்


;