மீண்டும் இயக்குனராகும் ஆமீர்கான்!

மீண்டும் இயக்குனராகும் ஆமீர்கான்!

செய்திகள் 13-Jan-2015 4:33 PM IST VRC கருத்துக்கள்

2007-ல் வெளியான ’தாரே ஜமீன் பர்’ ஹிந்திப் படத்தை இயக்கியதன் மூலம் தன்னை சிறந்த ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்தியவர் நடிகர் ஆமீர்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’பீகே’ இந்திய சினிமா வரலாற்றிலேயே அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்க, ஆமீர் அடுத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டார். இப்படத்திற்கு ‘பர்ஃப்’ என்று பெயர் வைத்துள்ளார். இப்பட கதை 4 ஆண்டுகளுக்கு முன்பே ரெடியாகி விட்டதாம்! ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அந்த கதையை இயக்குவதை தள்ளிபோட்ட ஆமீர், இப்போது அதை இயக்க ஆயத்தமாகி விட்டார். ஆமீர் எழுதிய கதைக்கு அவரது மனைவியும், இயக்குனருமான கிரண் ராவ் திரைக்கதை அமைக்க, ஆமீர்கானின் சொந்த பட நிறுவனமான ‘ஆமீர்கான் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;