சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!

செய்திகள் 13-Jan-2015 3:38 PM IST Chandru கருத்துக்கள்

‘படமே வரவில்லை... அதற்குள் ஓபனிங்கா?’ என வாய்பிளக்க வேண்டாம் ரசிகர்களே! படத்திற்கு கிடைக்கும் ஓபனிங் எவ்வளவு முக்கியமோ, அதுபோலத்தான் டீஸர், டிரைலர்களுக்கு யு டியூப்பில் கிடைக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, லைக்ஸ் போன்றவையும் முக்கியம்! அந்த வகையில் தன் முந்தைய படங்களைவிட சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தனுஷ் தயாரிப்பு, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கம், அனிருத் இசை, சிவகார்த்திகேயன் ஹீரோ என ‘எதிர்நீச்சல்’ டீம் ரிப்பீட் அடித்திருக்கும் ‘காக்கி சட்டை’யின் டிரைலர் கடந்த 10ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இந்த டிரைலருக்கு பெரிய எதிர்பார்ப்பிருந்ததால் வெளியான 65 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயனின் டிரைலருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால் கோலிவுட்டே வியந்து நிற்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;