விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ‘கப்பல்’ நாயகி!

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ‘கப்பல்’ நாயகி!

செய்திகள் 13-Jan-2015 3:04 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகிய ‘கப்பல்’ படத்தின் மூலம் ரசிர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர் சோனம் பாஜ்வா. தனது முதல் படமே பெரும் வெற்றிப் பெற்றிருப்பதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறார் சோனம் பாஜ்வா! அது பற்றி அவர் பகிர்ந்துகொள்ளும்போது,
‘‘நான் பஞ்சாபை சேர்ந்தவள். என்னோட பெரும்பாலான நண்பர்களும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தான். நாடே போற்றும் ஒரு இயக்குனரான ஷங்கர் சாருடைய தயாரிப்பில் என்னுடைய முதல் படம் அமைந்தது எனக்கு மிக மிக பெருமை. ‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் தூண்களான விஜய் சார், விக்ரம் சார், ஏ.ஆர். ரஹ்மான் சார், ஷங்கர் சார் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களது கனிவான வார்த்தைகளும்., ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது. இதனை தொடர்ந்து நான் விஜய் சாருடைய தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார் அவர். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். ‘கப்பல்’ படத்திற்கு பிறகு எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அது சம்பந்தமாக விரைவில் முறையான அறிவிப்புகள் வரும்’’ என்கிறார் வசீகர புன்னகையோடு சோனம் பாஜ்வா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;