கவுண்டமணிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!

கவுண்டமணிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!

செய்திகள் 13-Jan-2015 2:49 PM IST VRC கருத்துக்கள்

ஒரு இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் படங்கள் ‘வாய்மை’, மற்றும் ‘49-ஓ’. இப்படங்கள் விரைவில் ரிலீசாகவிருக்கிற நிலையில் மற்றுமொரு படத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. இந்தப் படத்திற்கு வித்தியாசமாக ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தில் கவுண்டமணி, சினிமா கம்பெனிகளுக்கு கேரவன் மற்றும் கிரேன் போன்ற பொருட்களை சப்ளை செய்பவராக நடிக்கிறார். இப்படத்தை சுசீந்திரனின் உதவியாளர் பாலமுருகன் இயக்குகிறார். இவர், முழுக்க முழுக்க கவுண்டமணியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட காமெடி ஸ்கிரிப்ட்டாம் இது. இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டதும் கவுண்டமணி உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;