ஒரே நாளில் வருகிறது அஜித் படம்!

ஒரே நாளில் வருகிறது அஜித் படம்!

செய்திகள் 13-Jan-2015 11:33 AM IST VRC கருத்துக்கள்

அஜித், கௌதம் மேனன் கூட்டணி அமைத்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதால் படத்தின் இறுதிகட்ட வேலைகள் சூடுப் பிடித்துள்ளது. இப்படம் ‘யென்டெ வாட கன்னி’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. தமிழ் ‘என்னை அறிந்தால்’ வெளியாகும் அன்றே தெலுங்கிலும் இப்படத்தை வெளியிடும் திட்டத்துடன் தெலுங்கு பதிப்பின் வேலைகளும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித் நடித்த ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற படங்கள் தமிழில் வெளியாகி ஒரு சில நாட்கள் கழித்தே தெலுங்கில் வெளியானது. ஆனால் ‘என்னை அறிந்தால்’ படத்தை அதே நாளில் தெலுங்கிலும் வெளியிட தீர்மானித்துள்ள இப்பட குழுவினர் படத்தை புரொமோஷன் செய்யும் வேலைகளையும் துவங்கிவிட்டனர். இதனையொட்டி வரும் பொங்கலன்று ஜெயா டி.வி.யில் ‘என்னை அறிந்தால்’ படம் சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;