சென்சாருக்கு போகும் சிம்புவின் வாலு!

சென்சாருக்கு போகும் சிம்புவின் வாலு!

செய்திகள் 13-Jan-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடித்த படங்கள் வெளியாகி வெகு நாட்கள் ஆகியுள்ள நிலையில், நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த அவரது ‘வாலு’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய் சந்தர் இயக்கி, ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா மோத்வானி, சந்தான்ம், வி.டி.வி.கணேஷ் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள ‘வாலு’ படக்குழுவினர் பொங்கல் முடிந்தந்தும் படத்தை சென்சார் உறுப்பினர்களுக்கு போட்டு காண்பிக்க உள்ளனர் என்றும், சென்சார் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக் சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸரும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;