முருகதாஸுடன் இணையும் சித்தார்த், தயாநிதி அழகிரி!

முருகதாஸுடன் இணையும் சித்தார்த், தயாநிதி அழகிரி!

செய்திகள் 12-Jan-2015 4:55 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அஜய் ஞானமுத்து இயக்கும் முதல் படம் ‘டிமான்டி காலனி’. ஹாரர் படமாக உருவாகி வரும் இதில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு இடத்தின் பெயர்தான் டிமான்டி காலனி. இப்படத்தை அருள்நிதியின் மேகனா மூவிஸும், தேனாண்டாள் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தை வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இன்று (ஜனவரி 12) இரவு 8 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த டீஸரை ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து நடிகர் சித்தார்த்தும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் வெளியிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;