இயக்குனராகிறார் ‘மிர்ச்சி’ சிவா!

இயக்குனராகிறார் ‘மிர்ச்சி’ சிவா!

செய்திகள் 12-Jan-2015 2:49 PM IST Chandru கருத்துக்கள்

‘ரேடியோ மிர்ச்சி’ மூலம் புகழ்பெற்ற சிவா ‘சென்னை 28’ படம் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் நிரூபித்தார். அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், பதினாறு, வ, கலகலப்பு, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தார். 2013ல் வெளிவந்த வணக்கம் சென்னை படத்திற்குப் பிறகு சிவாவின் நடிப்பில் வேறு படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ‘சிவாவுக்கு என்ன ஆச்சு’ என விசாரித்தால்... சத்தமில்லாமல் இயக்குனராகும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் சிவா என்கிற தகவல் கிடைத்தது.

தற்போது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சி.வி.குமாரின் நண்பர் மணிகண்டன் இயக்கும் ‘144’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த காதல், காமெடிப் படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு துவங்கவிருக்கிறதாம்.

இதுதவிர கடந்த சில மாதங்களாக சொந்தமாக கதை எழுதும் வேலையையும் கவனித்து வருகிறாராம் சிவா. இதுவரை இரண்டு கதைகளை எழுதி முடித்திருக்கும் சிவா, ஒரு கதைக்கு ‘காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு’ என பெயர் வைத்திருக்கிறார். இன்னொன்று குடும்பப்படத்திற்கான கதையாம். இக்கதைக்கு எஸ்.பி.பி. போன்ற ஒருவரை நாயகனாக்க வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறாராம் சிவா. கதைகளை எழுதி முடித்த கையோடு அதை படமாக இயக்குவதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம்.

பாபி சிம்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்திற்கு சிவாதான் வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;