தனுஷை முந்துவாரா சிவகார்த்திகேயன்?

தனுஷை முந்துவாரா சிவகார்த்திகேயன்?

செய்திகள் 12-Jan-2015 2:13 PM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இடைவெளியில் வெளியாகியிருக்கிறது அனேகன், காக்கி சட்டை படங்களின் டிரைலர். இரண்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் என்பதால், யு டியூப் பார்வையாளர்கள் எண்ணிக்கை விறுவிறுவென கூடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தனுஷை சிவகார்த்திகேயன் முந்திவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அனேகன்’ பட டிரைலர் கடந்த 7ஆம் தேதி யு டியூப்பில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்த டிரைலரை இதுவரை 10 லட்சம் பேர் கண்டுகளித்தும், 6750 பேர் லைக் செய்தும் இருக்கிறார்கள். அதேநேரம், கடந்த 10ஆம் தேதி வெளியான தனுஷின் ‘காக்கி சட்டை’ டிரைலரை 2 நாட்களிலேயே 7 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டும், 11500 பேர் லைக் செய்தும் இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரித்திருப்பது தனுஷ் என்பதோடு, இந்த டிரைலரில் ‘‘தல ஸ்டைல்ல சொல்லணும்னா.... இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்’’ என சிவகார்த்திகேயன் பேசியிருப்பதும்தான் இவ்வளவு பெரிய வரவேற்புக்கு காரணம் என்கிறார்கள். வரும் நாட்களில் ‘அனேகன்’ டிரைலரைவிட ‘காக்கி சட்டை’ டிரைலர் அதிகம் பேரால் பார்க்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;