அஜித் - ஜெய் : ஒரு ஆச்சர்ய ரிலீஸ் ஒற்றுமை!

அஜித் - ஜெய் : ஒரு ஆச்சர்ய ரிலீஸ் ஒற்றுமை!

செய்திகள் 12-Jan-2015 12:43 PM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் படத்தைத் தொடர்ந்து இரண்டு வார இடைவெளியில் ஜெய் படமும் ரிலீஸாகவிருக்கிறது.

அஜித்தின் கேரியரில் மறக்க முடியாத படம் ‘மங்காத்தா’. அஜித்தின் 50வது படம் என்பதோடு, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் என்பதால் ‘தல’ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அஜித் படங்களில் இதுவே முதன்மையானதாக இடம்பிடித்திருக்கிறது. ‘மங்காத்தா’ படம் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீஸானது. இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து சரவணன் இயக்கத்தில் ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் ஜெய்க்கும் மிக முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதேபோன்று தற்போது அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சரியாக இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் ‘வலியவன்’ திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

2011ல் நிகழ்ந்த மேஜிக் மீண்டும் நிகழ்ந்தால் அஜித்திற்கும், ஜெய்க்கும் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;