‘அனேகன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த கே.வி.ஆனந்த்!

‘அனேகன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த கே.வி.ஆனந்த்!

செய்திகள் 12-Jan-2015 11:58 AM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’யின் சூப்பர்ஹிட் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கிறது அனேகன். கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அமைரா தஸ்தர். முக்கிய வேடமொன்றில் கார்த்திக்கும் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான பாடல்கள் கடந்த வருட இறுதியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு ‘அனேகன்’ படத்தின் டிரைலர் ஒன்று கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டு தற்போது 10 லட்சம் பார்வையாளர்களை எட்டியிருக்கிறது.

கடந்த டிசம்பரிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘அனேகன்’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் அறிவித்திருக்கிறார். பிப்ரவரி 14ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது அனேகன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;