அஜித்திடம் விவேக் வியந்த விஷயம்?

அஜித்திடம் விவேக் வியந்த விஷயம்?

செய்திகள் 12-Jan-2015 11:58 AM IST Chandru கருத்துக்கள்

1996ஆம் ஆண்டு வெளியான ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தில் அஜித்துடன் முதல்முறையாக இணைந்தார் நடிகர் விவேக். அதனைத் தொடர்ந்து பகைவன், காதல் மன்னன், உன்னைத்தேடி, வாலி, முகவரி, பூவெல்லாம் உன் வாசம், பரமசிவன், ஆழ்வார், கிரீடம் உட்பட 8 படங்களில் அவருடன் இணைந்திருக்கிறார். கிரீடம் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அஜித்துடன் விவேக் இணைந்து நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் அஜித்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பது குறித்து வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் விவேக், அஜித்திடம் வியந்துபோன விஷயம் குறித்துப் பேசியிருக்கிறார். தைரியமாக ரசிகர் மன்றங்களை கலைத்தது, சிக்ஸ்பேக் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இயல்பான உடல்வாகுவுடன் வலம் வருவது, டை அடிக்காமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே படங்களில் நடிப்பது போன்ற விஷயங்களுடன், அடுத்தவர்களின் தேவையை உணர்ந்து உதவி செய்யும் அஜித்தின் குணத்தையும் பார்த்து வியந்து போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;