5 நாட்களுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்டிய ஐ!

5 நாட்களுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்டிய ஐ!

செய்திகள் 12-Jan-2015 11:29 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ஷங்கரின் ‘ஐ’. கடைசி நேரத்தில் திடீர் தடை உத்தரவால் கொஞ்சம் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு, தற்போது எல்லா பிரச்சனைகளும் தீர்த்துவைக்கப்பட்டு திட்டமிட்டபடி உறுதியாக ரிலீஸாகிறது இப்படம். நேற்று முதல் ‘ஐ’ படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 680 திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கான முதல் 5 நாள் டிக்கெட்டுகள் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாம். குறிப்பாக சென்னை தியேட்டர்களில் முதல் 5 நாட்களுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்டாத குறைதான். பல தியேட்டர்களில் ஒன்றிரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே காலியாக இருக்கின்றதாம்... அதுவும் முன்வரிசைகளில் மட்டுமே!

இப்படத்தின் மீது எழுந்துள்ள பலத்த எதிர்பார்ப்பும், ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இப்படத்தின் மேக்கிங் இருப்பதால் கண்டிப்பாக தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளதாலும் மிகப்பெரிய ஓபனிங் இப்படத்திற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் முதல் நாள் வசூலில் முந்தைய சாதனைகள் பலவற்றையும் முறியடிக்கும் என்று கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;