புதிய ‘தேசிய கீதம்’ உருவாக்கும் ‘ஷமிதாப்’ டீம்!

புதிய ‘தேசிய கீதம்’ உருவாக்கும் ‘ஷமிதாப்’ டீம்!

செய்திகள் 12-Jan-2015 11:05 AM IST Top 10 கருத்துக்கள்

பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் நடிக்கும் ‘ஷமிதாப்’ ஹிந்தி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இளையராஜா இசையமைப்பாளராகவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகவும் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த ஷமிதாப் கூட்டணியின் உருவாக்கத்தில் இந்திய தேசிய கீதத்தின் புதிய வடிவம் ஒன்று விரைவில் உருவாகவிருக்கிறது.

‘உங்களின் இசையமைப்பில் தேசிய கீதத்திற்கான புதிய வடிவத்தை கொண்டு வந்தால் எப்படியிருக்கும்?’ என இயக்குனர் பால்கி தன் யோசனையை இளையராஜாவிடம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். அவருக்கும் அது புதுவிதமாகப்படவே, 15 நிமிடத்தில் தேசிய கீதத்தின் புதிய வடிவிற்கான ட்யூனை அற்புதமாகப் போட்டுக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த டியூன், இளையராஜா, அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து பாட அருமையான பாடலாக உருவெடுத்துள்ளது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தேசிய கீதத்தின் புதிய வடிவிற்கான காட்சிகளை தானே படமாக்கித் தருவதாக முன்வந்திருக்கிறார். விரைவில் அமிதாப், ராஜா பாடுவது போன்ற காட்சிகளையும், இடையிடையே நாட்டுப்பற்று மிக்க சில காட்சிகளையும் இணைத்து புதிய தேசி கீதத்திற்கான ஆல்பம் ஒன்று உருவாகவிருக்கிறது. வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்த ஆல்பம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;