‘‘தலைப்பு பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்’’ - ‘டார்லிங்’ தயாரிப்பாளர்

‘‘தலைப்பு பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்’’ - ‘டார்லிங்’ தயாரிப்பாளர்

செய்திகள் 12-Jan-2015 10:32 AM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் ‘டார்லிங்’. இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் ரீமேக். ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி டாங்கே, நிக்கி கல்ராணி, கருணாஸ், பால சரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன், கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பொங்கலுக்கு ‘டார்லிங்’ வெளிவரவுள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 10) இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா,

‘‘டார்லிங் படம் தெலுங்கை விட பல மடங்கு நன்றாக வந்துள்ளது. படத்துக்கு தலைப்பு கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறது. நல்ல கதை கூட பிடித்து விடலாம். ஆனால், தலைப்பு கிடைப்பதில்லை. எந்த தலைப்பு எடுத்தாலும் யாராவது பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். எந்த தலைப்பை யோசித்து வைத்தாலும், அது ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்திலோ, கில்டிலோ பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். குறிப்பிட்ட ஆண்டு வரை பதிவு செய்துவிட்டு படமெடுக்கவில்லை என்றால் அதை ரத்து செய்ய வேண்டும்.

மீண்டும் தெலுங்கிலிருந்து 'ரன் ராஜா ரன்' படத்தை தமிழில் எடுக்க இருக்கிறோம். தமிழிலும் கார்த்தி நடிக்கும் 'கொம்பன்', சூர்யா சாரின் 'மாஸ்' படங்களைத் தயாரிக்கிறோம். ஸ்டுடியோ க்ரீன் சிறு பட்ஜெட் படங்களையும் தயாரிக்கும்''’’ என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குப்பத்து ராஜா - டீசர்


;