தொழில் அதிபதிரை மணந்த நடிகை மோனிகா!

தொழில் அதிபதிரை மணந்த நடிகை மோனிகா!

செய்திகள் 12-Jan-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

அழகி, சண்டக்கோழி, நதிகள் நனைவதில்லை, சிலந்தி உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த மோனிகா சமீபத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதோடு ஒரு சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறிய இவர், தன் பெயரையும் ரஹீமா என மாற்றம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி ரஹீமாவுக்கும் (மோனிகா) தொழில் அதிபர் மாலிக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் சென்னை கிண்டியில் நேற்று பகல் 12 மணிக்கு இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இருவீட்டாரின் சொந்த, பந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இத்திருமண விழாவில் சினிமா உலகைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நதிகள் நனைவதில்லை - டிரைலர்


;