CCL : கேரளாவை பந்தாடிய சென்னை!

CCL : கேரளாவை பந்தாடிய சென்னை!

செய்திகள் 12-Jan-2015 9:59 AM IST Chandru கருத்துக்கள்

செலிபிரட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் இணைந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். ‘ஐபிஎல்’ அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த ‘சிசிஎல்’லுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த வருட ‘சிசிஎல்’லின் (சீசன் 5) மூன்றாவது பேட்டி நேற்று (ஜனவரி 11) சென்னைக்கும், கேரளாவுக்கும் இடையே ஐதராபாத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை ரைனோஸ் (Chennai Rhinos) அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. சாந்தனு 52 ரன்களும், விக்ராந்த் 35 ரன்களும், விஷ்ணு 41 ரன்களும் எடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் (Kerala Strikers) அணி கோலிவுட்டின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

மொத்தம் 20 ஓவர்களை ஆடிய கேரள அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 89 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை ரைனோஸ் அணியைச் சேர்ந்த அஷோக் செல்வன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து, அருமையான ரன்அவுட் ஒன்றையும் செய்தார். நடிகர் ஆர்யா பிடித்த சூப்பர் கேட்ச் ஒன்றும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதோடு சென்னை டீமை அற்புதமாக வழிநடத்தி வெற்றிபெறச் செய்ததில் கேப்டன் ஜீவாவின் பங்கும் அற்புதமானது.

சென்னை அணியின் அடுத்த போட்டி வருகிற 18-ந் தேதி வீர் மராத்தி அணிக்கு எதிராக பெங்களூரில் நடக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;