சிம்ஹாவுக்கு ஜோடியாகும் ‘டார்லிங்’ நிக்கி கல்ரானி!

சிம்ஹாவுக்கு ஜோடியாகும் ‘டார்லிங்’ நிக்கி கல்ரானி!

செய்திகள் 12-Jan-2015 9:44 AM IST Top 10 கருத்துக்கள்

ஒரு படம்கூட இன்னும் வெளியாகவில்லை, அதற்குள் கோலிவுட் ரசிகர்களின் ஸ்வீட் ‘டார்லிங்’ ஆகியிருக்கிறார் நிக்கி கல்ரானி. பெங்களூரைச் சேர்ந்த இந்த அழகுப் பதுமை மலையாள படங்களில் நடித்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆதிக்கு ஜோடியாக ‘யாகாவராயினும் நாகாக்க’ படம் மூலம் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். ஆனாலும் அவரின் முதல் தமிழ்ப்படமாக ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த ‘டார்லிங்’ படமே திரைக்கு வரவிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி, ‘ஜிகர்தண்டா’ புகழ் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த அரசியல் படத்தை கே.வி.ஆனந்திடம் அசோஷியேட் டைரக்டராகப் பணியாற்றிய மதிவாணன் இயக்கவிருக்கிறார். வரும் மார்ச் மாதம் முதல் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் செல்லவிருககிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;