காக்கி சட்டை டிரைலர் - விமர்சனம்

காக்கி சட்டை  டிரைலர் - விமர்சனம்

கட்டுரை 10-Jan-2015 6:41 PM IST Chandru கருத்துக்கள்

க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் மதிமாறன் களமிறங்கிவிட்டார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ டிரைலர் வெளியாகிவிட்டது. காமெடியனாக அறிமுகமாகி, காமெடி நாயகனாக மாறி, சாதாரண கதாநாயனாக உருவெடுத்து, மாஸ் ஹீரோவாக அடுத்த கட்டத்துக்கு தாவ முயன்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் வெற்றியும் பெறுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்த டிரைலர்.

‘‘உலகத்துல ரொம்ப வேகமா வளர்ந்துகிட்டு வர்ற பிசினஸ்... மத்த நாடுகளவிட இங்க வாய்ப்புகள் அதிகம்... பணமும் குறைவு’’ என்ற வசனத்தோடு தொடங்குகிறது இந்த டிரைலர். ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றத்தை தடுக்கும் பொறுப்பை க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் மதிமாறன் கையிலெடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. ஆனால், அது என்ன குற்றம்? அதை சிவகார்த்திகேயன் எப்படி தடுத்து நிறுத்தப்போகிறார் என்ற சஸ்பென்ஸைத் தந்திருக்கிறார்கள்.

பாடல்கள் முதல்முறை கேட்டதைவிட, டிரைலரில் காட்சிகளோடு பார்க்கும்போது அதிக கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அனிருத்தின் பின்னணி இசை நிச்சயம் ‘காக்கி சட்டை’யின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பெரும் பலமாக இருக்கும். ஒளிப்பதிவும் ரசிக்கும்படி உள்ளது. கதாநாயகி ஸ்ரீதிவ்யாவிற்கு இப்படத்தில் டூயட் பாடுவதைத் தவிர்த்த வேலைகள் எதுவும் இருக்குமா என்பது சந்தேகமே. அதேபோல் சூரி, சதீஷ் போன்ற மெயின் காமெடியன்கள் யாரும் இப்படத்தில் இல்லை. இமான் அண்ணாச்சியிடம் அந்த பொறுப்பைக் கொடுத்துவிட்டு முழுநேர ஹீரேவாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

வெறும் ஆக்ஷன் த்ரில்லராக மட்டுமில்லாமல் வழக்கம்போல் சிவகார்த்திகேயனின் காமெடி, குடும்ப சென்டிமென்ட் போன்ற விஷயங்களும் இந்த ‘காக்கி சட்டை’யில் இருக்கும். ஆனால் நிச்சயம் அவரின் முந்தைய படங்களைவிட இதில் குறைவாகவே இருக்கும். அதோடு தனது 6வது படத்திலேயே பஞ்ச் டயலாக், ஸ்டைலிஷ் மேனரிசங்கள், வில்லனுக்கு சவால் விடுதல், அறிமுகப்பாடல், சண்டைக்கு முக்கியத்துவம் என ‘மாஸ்’ ஹீரோ ஆவதற்கான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால் அவருக்காக இன்னும் பல உயரங்கள் நிச்சயம் தமிழ் சினிமாவில் காத்திருக்கின்றன!

மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் கேரியரில் ‘இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;