‘காக்கி சட்டை’க்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்?

‘காக்கி சட்டை’க்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்?

செய்திகள் 10-Jan-2015 4:29 PM IST Chandru கருத்துக்கள்

தனுஷ் தயாரிப்பில், ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்க சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யாவும், அப்பாவாக பிரபுவும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தின் வேலைகள் முழுவதும் முடிவடைந்து இன்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் இருப்பதால் சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இன்று (ஜனவரி 10) மாலை 6 மணிக்கு ‘காக்கி சட்டை’ படத்தின் 2 நிமிட 41 வினாடிகள் ஓடும் டிரைலர் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. படம் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;