‘என்னை அறிந்தால்’ த்ரிஷாவுக்கு 25வது தமிழ்ப் படமா?

‘என்னை அறிந்தால்’ த்ரிஷாவுக்கு 25வது தமிழ்ப் படமா?

கட்டுரை 10-Jan-2015 11:09 AM IST Chandru கருத்துக்கள்

வரும் 23ஆம் தேதி நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அஜித்துடன் த்ரிஷா நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் 29ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் த்ரிஷாவின் நடிகை த்ரிஷாவின் 25வது படம் என ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

1999ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடித்த ‘ஜோடி’ படத்தின் மூலம் நடிகை த்ரிஷா தமிழில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் இப்படத்தில் அவர் ஒரேயொரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். பின்னர், சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்திலிருந்து தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் கன்னடத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படம் த்ரிஷாவின் 25வது தமிழ்ப் படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் 25வது படமாக ‘என்னை அறிந்தால்’ வரவேண்டும் என்பதற்காகவே அவர் தமிழில் முதலில் அறிமுகமான ‘ஜோடி’ படத்தை ரசிகர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு அவர் நடித்து நீண்ட நாட்களாக வெளிவராமலிருக்கும் ‘பூலோகம்’ படத்தையும் கண்டுகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக மூன்று மொழிகளிலும் சேர்த்து ‘என்னை அறிந்தால்’ படம் 47வது படமாக த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கிறது.

ரசிகர்கள் கூறும் த்ரிஷா நடித்த 25 தமிழ்ப் படங்களின் பட்டியல்

1. மௌனம் பேசியதே
2. மனசெல்லாம்
3. சாமி
4. லேசா லேசா
5. அலை
6. எனக்கு 20 உனக்கு 18
7. கில்லி
8. ஆயுத எழுத்து
9. திருப்பாச்சி
10. ஜி
11. ஆறு
12. ஆதி
13. உனக்கும் எனக்கும்
14. கிரீடம்
15. பீமா
16. வெள்ளித்திரை (சிறப்புத் தோற்றம்)
17. குருவி
18. அபியும் நானும்
19. சர்வம்
20. விடிவி
21. மன்மதன் அம்பு
22. மங்காத்தா
23. சமர்
24. என்றென்றும் புன்னகை
25. என்னை அறிந்தால்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;