சிம்புவைக் கலாய்த்த பாண்டிராஜ்!

சிம்புவைக் கலாய்த்த பாண்டிராஜ்!

செய்திகள் 10-Jan-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிம்பு தயாரிக்கும் இப்படத்தில் அவரின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலன்று வெளியாகும் என இயக்குனர் பாண்டிராஜ் கடந்த 7ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால், டிரைலருக்கான பின்னணி இசை இன்னும் ரெடியாகவில்லையாம். இதனைக் குறிப்பிட்டு நகைச்சுவையாக தனது ‘ட்வீட்’ மூலம் சிம்பு, குறளரசனை கலாய்த்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

அதில் அவர், ‘‘இது நம்ம ஆளு படத்தின் டீஸர் பொங்கலுக்கு வருது... ஆனா பின்னணி இசை இன்னும் வரல... என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’’ என சிம்புவுக்கும், குறளரசனுக்கும் ‘டேக்’ செய்து காமெடி செய்திருக்கிறார். பொங்கலன்று வெளியாகும் இந்த டீஸரில் ‘‘எல்லாருக்கும் லவ்ல பிரச்சினை இருக்கும்... உனக்கு பிரச்சினைல லவ் இருக்கு. ஆனா அந்த பிரச்சினையெல்லாம் லவ் பண்ற பாரு, அத நான் லவ் பண்றேன்டா!’’ என சிம்புவைப் பற்றிய வசனம் ஒன்று இடம் பெற்றிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;