‘ஐ’ படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘ஐ’ படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 10-Jan-2015 10:24 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்தின் மீதான தடையை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து வழக்கை முடித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘ஐ’ படம் சம்பந்தமாக ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் அப்படியே இங்கே தரப்பட்டள்ளது.

‘‘இந்த பத்திரிகைக் குறிப்பு வாயிலாக ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திரு ரவிசந்திரனின் தயாரிக்கும் ‘ஐ’ திரைப்படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பைத் தருகிறோம். ஜனவரி 14ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளிவரும் ‘ஐ’ படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. திரைபடத்துறையின் நலனை முன்னிட்டு இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே ‘ஐ’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். இந்தப்படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அவர்கள் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பில் இடம்பெற்றிருந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;