‘டார்லிங்’ டீமின் அடுத்த படம்?

‘டார்லிங்’ டீமின் அடுத்த படம்?

செய்திகள் 9-Jan-2015 5:49 PM IST Top 10 கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ், ஷ்ருடி டாங்கே, நிக்கி கல்ரானி, ராஜேந்திரன், கருணாஸ், பாலசரவணன் ஆகியோர் நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கியிருக்கும் ‘டார்லிங்’ படம் வரும் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘டார்லிங்’கை ஸ்டுடியோ கிரீன், கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து கடந்த வருடம் வெளிவந்து ஹிட்டான ‘ரன் ராஜா ரன்’ என்ற தெலுங்கு படத்தையும் தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். ‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனே இப்படத்தையும் இயக்குகிறார். நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;