‘ஐ’ பிரச்சனை முடிந்ததாம்...!

‘ஐ’ பிரச்சனை முடிந்ததாம்...!

செய்திகள் 9-Jan-2015 3:45 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படம் வரும் 14ஆம் தேதி வெளியாவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வந்த வேளையில் திடீர் திருப்பமாக பிவிபி நிறுவனத்தின் பிக்சார் மீடியா ஒர்க்ஸுக்கு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கடன் வைத்திருப்பதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஐ படத்தின் ரிலீஸுக்கு வரும் 30ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் படம் வருமா வராதா என்ற சூழல் நிலவியது.

ஆனால், இன்று இருதரப்பினரும் இப்பிரச்சனை குறித்து பேசியதாகவும், பின்னர் சுமூக முடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ’ஐ’ மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டு படம் திட்டமிட்டபடி வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

(ஐ படம் 14ஆம் தேதி வருமேயானால் அனேகன், காக்கிசட்டை, எனக்குள் ஒருவன் போன்ற படங்கள் மீண்டும் பின்வாங்கிவிடும்!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;