‘சேட்டை’ இயக்குனரின் அடுத்த 2 படங்கள்!

‘சேட்டை’ இயக்குனரின் அடுத்த 2 படங்கள்!

செய்திகள் 9-Jan-2015 12:17 PM IST VRC கருத்துக்கள்

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை தொடர்ந்து ஆர். கண்ணன் 2 படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர் ‘போடா, ஆண்டவனே என் பக்கம்’. அதிரடி சண்டை காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட படமாம் இது. இப்படத்தை பிரபல கார்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. இதில் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். கண்ணன் இயக்கும் இன்னொரு படத்திற்கு ‘அடியே காந்தா’ என்று பெயரிட்டுள்ளார். இது காமெடி படமாம். இதில் முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். இந்த 2 படங்கள் சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்களை விரைவில் தரவிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;