‘கயல்’ நாயகியிடம் 3 படங்கள்!

‘கயல்’ நாயகியிடம் 3 படங்கள்!

செய்திகள் 9-Jan-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆனந்தி நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘கயல்’. ஆனந்திக்கு, ‘பொறியாளன்’ பெயர் சொல்லும் படியான படமாக அமையாவிட்டாலும் ‘கயல்’ அவரை அடையாளம் காட்டியுள்ளது. பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தில் நடித்த அமலா பால், ‘கும்கி’ படத்தில் நடித்த லட்சுமி மேனன் வரிசையில் ஆனந்தியும் இடம் பிடிப்பார் என்றே சொல்லப்படுகிறது. தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷுக்கு ஜோடியாக ‘விசாரனை’, சற்குணம் இயக்கும் படம் என ஆனந்தி கைவசம் இப்போது 3 தமிழ் படங்கள் இருக்கின்றன. அத்துடன் வேறு சில பட வாய்ப்புகளும் ஆனந்தியை தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;